பொது செய்தி

தமிழ்நாடு

இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு: முன்னேற்பாடுகளை துவக்கிய நிர்வாகம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா வைரஸ் தடுப்புக்காக, தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், மக்களுக்கு அத்யாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகம் முழுவதும், 144 தடையுத்தரவு இன்று மாலை 6:00 மணி முதல், 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என, அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர்கள் மூலமாக தடையுத்தரவு அறிவிப்பு வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.மக்களுக்கான, அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் நீங்கலாக, மற்ற கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க, பொது 'இ-சேவை' மையங்களை, 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் உட்பட, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள, 'இ-சேவை' மையங்கள் நேற்று மூடப்பட்டன. வரும், 31ம் தேதி வரை, அனைத்து பொதுசேவை மையங்களும் இயங்காது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மனுக்கள் பெட்டிகலெக்டர் அலுவலகத்தில், திங்கள்தோறும் நடக்கும், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்களது முக்கிய கோரிக்கையை தெரிவிக்கவசதியாக, குறைகேட்பு மனுக்கள் பெறும்பெட்டி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்தது.'பிளாட்பார்ம்' வாசிகள்மாவட்டத்தில், சொந்த வீடு இல்லாத 'பிளாட்பார்ம்' வாசிகளாக உள்ளவர்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடையுத்தரவு அமலில் இருக்கும் வரை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று முதல், சமூகநலத்துறை அதற்கான பணிகளை துவக்கியுள்ளது.கடைகளை மூட உத்தரவுதாலுகா வாரியாக, தாசில்தார்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு, நேற்று முதல் கடைகளை அடைக்க நேரில் வலியுறுத்தி வருகிறது. மளிகை, காய்கறி, மருந்தகம், பால் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடை நீங்கலாக, மற்ற கடைகளை அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் தெற்கு தாலுகாவில், நேற்று மாலை, 4:30 மணி முதல் கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.முதியோர் இல்லங்கள்சமூகநலத்துறை சார்பில், முதியோர் இல்லங்களை ஆய்வு செய்து, முதியோர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகநல அலுவலர் அம்பிகா, முதியோர் இல்லங்களை நேரில் ஆய்வு செய்து, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கி வருகிறார். இதேபோல், குழந்தைகள் காப்பகமும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.அம்மா உணவகம் உண்டுதடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட வேண்டுமென, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X