பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரவு! அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும்... காஞ்சியிலிருந்து வெளியூர் பஸ் சேவைகள் ரத்து

Added : மார் 24, 2020
Share
Advertisement
 உத்தரவு! அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும்... காஞ்சியிலிருந்து வெளியூர் பஸ் சேவைகள் ரத்து

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர, பிற கடைகள், நேற்றும் மூடப்பட்டன.

பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட வெளியூர் பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன .தமிழகத்திலும், 'கொரோனா' வைரஸ் பரவி வரும் சூழலில், சுகாதார துறையும், அந்தந்த மாவட்ட நிர்வாகமும், நோய் தடுப்பு நடவடிக்கைகளில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும், கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளை, கவனமாக மேற்கொள்ள, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


கண்காணிப்பு


அதற்கேற்றாற்போல், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவுடன், காணொலியில் பேசி, தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.இதையடுத்து, வெளிநாட்டிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வந்த நபர்களுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அவர்கள், தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவர் எனவும், கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர, பிற அனைத்து கடைகளையும் மூட, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு, வரும், 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என, தெரிகிறது.அதன்படி, மார்க்கெட்டுகளில் உள்ள காய்கறி கடை, பழக்கடை, மளிகை கடை, உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே செயல்பட்டன.பட்டு சேலை கடைகள், துணி கடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடைகள் என, பிற வகையான கடைகள் மூடப்பட்டன.


ஆய்வு


இந்த நடைமுறை, காஞ்சிபுரம் நகரில் மட்டுமே செயல்பட்டதே தவிர, கிராமப்புறங்களில், அனைத்து வகையான கடைகளும் செயல்பட்டன.காஞ்சிபுரத்தில் உள்ள ராஜாஜி மற்றும் நேரு மார்க்கெட்டுகளுக்கு வந்த பொதுமக்கள், கைகளை சுத்தம் செய்து கொள்ள, கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டது.ராஜாஜி மார்க்கெட் பகுதியில், பொதுமக்கள் கைகழுவுவதற்காக, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

இவற்றை, காஞ்சிபுரம் சப் - கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.திங்கட்கிழமை தோறும், கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வரும், 31ம் தேதி வரை மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.கூட்டம் ரத்து செய்யப்பட்டது தெரியாமல், சிலர், மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, நேற்று மனு அளிக்க வந்தனர்.

பின், அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில், மனுக்களை போட்டு சென்றனர்.காஞ்சிபுரம் நகரில் இருந்து, பெங்களூரு, திருவண்ணாமலை, வேலுார், சென்னை, திண்டிவனம், தஞ்சாவூர், திருத்துறைபூண்டி, புதுச்சேரி என, அனைத்து பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.இந்நிலையில், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட நீண்ட துாரம் செல்லும் பகுதிகளுக்கான பல பஸ் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.


ரயில் ரத்து


காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் கிராமப்புறங்களுக்கு மட்டுமே, பஸ் சேவை இருந்தது.காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு, காலை, 9:00 மணிக்குள், ஐந்து ரயில் சேவை வழங்கப்பட்டது.ஆயிரக்கணக்கானோர், இந்த மின்சார ரயிலில் சென்னை, தாம்பரம் பகுதிகளில் வேலைக்கு சென்று வந்தனர்.நேற்று ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டதால், ரயில் நிலையம் வரை சென்று, பலர் வீடு திரும்பினர்.உணவகம் உண்டுகாஞ்சிபுரம் நகரில், விளக்கடி கோவில் தெரு மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில், அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.மக்கள் ஊரடங்கு நடைபெற்ற நேற்று முன்தினம், இரு அம்மா உணவகங்களும் மூடப்பட்டிருந்தன.

இதனால், உணவு கிடைக்காமல், ஏழை எளியோர் சிரமப்பட்டனர்.இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களும், நேற்று வழக்கம்போல் செயல்பட்டன.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சங்கர மடத்திற்குள், பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, கதவு மூடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X