பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு கிராமத்தில் ஏற்படுத்த முடிவு

Added : மார் 24, 2020
Share
Advertisement

அனுப்பர்பாளையம்:கிராமங்களில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் வீடுகளுக்கு வழங்கு வது, என ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி, திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதியில் உள்ள தொரவலுார், மேற்குபதி, சொக்கனுார், பட்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், பெருமாநல்லுார், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், ஆகிய ஊராட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொரவலுாரில் நடைபெற்றது.கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, பேசப்பட்டது.இதில், ஊராட்சியில் உள்ள அனைத்து வீதிகளிலும் கிருமிநாசினி தெளிப்பது, கொரோனா வைரஸை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வீடு, வீடாக வழங்குவது. யாருக்காவது காய்ச்சல் இருப்பது தெரிந்தால், அதனை சுகாதார துறைக்கு தெரியப்படுத்துவது. என முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X