பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோவில் ராஜகோபுரம் கட்ட முடியனுார் பக்தர்கள் கோரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

தியாகதுருகம்: முடியனுார் ஆதி அருணாசலேஸ்வரர் கோவில்ராஜ கோபுரத்தை கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தியாகதுருகம் அடுத்த முடியனுார் கிராமத்தில் நுாறாண்டு பழமையான ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.திருவண்ணாமலை சிவன் கோவிலுக்கு இணையான ஐதீகம் கொண்டதாக இக்கோயில் உள்ளது. கார்த்திகை மாத தீப திருவிழா இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.கோவில் உட்பிரகார மண்டபத்தின் மேற்கூரையில் 200 ஆண்டுகள் பழமையான மூலிகை வண்ணக் கலவையால் வரையப்பட்ட அரிய ஓவியங்கள் உள்ளன.இக்கோவில் ராஜகோபுரம் கட்டப்படாமல் முகப்பு வாசல் மண்டபம் மட்டும் உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இக்கோவில் ராஜ கோபுரத்தை கட்ட வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் கோவிலின் உட்பிரகாரம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது.இதனை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை.முடியனூர் கிராமத்திற்கு சிறப்பு சேர்க்கும் இக்கோவிலை புதிப்பித்து ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என்பது இப்பகுதி பக்தர்களின் கோரிக்கையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X