பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு களமிறங்கிய ஆசிரியர்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

அனுப்பர்பாளையம்:அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டனர். -கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுப்பு வழங்கியுள்ளது. ஆனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். நேற்று பள்ளி சென்ற அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 25 பேர். பள்ளியில் வெறுமனே இருப்பதை தவிர்த்து, அனைவரும் பொது மக்களை சந்தித்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.இவர்கள் அம்மாபாளையம் பஸ் ஸ்டாப், அங்குள்ள பழக்கடை, பேக்கரி, ஓட்டல், ஆகிய பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள், இடை வெளி விட்டு நின்று பேசுங்கள், இருமல், சளி, இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள், என அறிவுறுத்தினர்.அம்மாபாளையம் வாகன சோதனை சாவடி சென்று வாகன ஓட்டிகளிடமும், அருகில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் பொதுமக்களிடமும் கொரோனா வைரஸ் தடுப்புவிழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X