பொது செய்தி

தமிழ்நாடு

தேசத்துக்காக சுய ஊரடங்கு, பெருமை அளிக்கிறது!

Added : மார் 24, 2020
Share
Advertisement

சக்திவேல், ஏ.இ.பி.சி., தலைவர்:ஆடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாமலும், ஆர்டர் ரத்து செய்யப்படுவதாலும், ஆடை ஏற்றுமதியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். திருப்பூர் உட்பட நாடுமுழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்கள், தங்கள் பிரச்னைகளை தெரிவித்தனர். அவர்களுக்கு பதில் அளித்தேன். தொழில் துறை பிரச்னைகளை மத்திய அரசு அதிகாரிகளுக்கு, இ-மெயில் மூலம் அனுப்பிவைத்தேன். முழுநேரமும் ஏற்றுமதியாளர்களுக்காக பணி செய்தது திருப்தி அளிக்கிறது.ஈஸ்வரன், 'சைமா' தலைவர்: காலையில் செய்தித் தாள் படித்தேன். தொடர்ந்து, டிவியில், கொரோனா சார்ந்த செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தேன். தொழில் நண்பர்களுக்கு போன் செய்து, தொழில் நிலவரங்கள் குறித்து பேசினேன்.மதியத்துக்குப்பின், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் புத்தகளை, மீண்டும் ஒருமுறை படித்தேன். நாள் முழுவதும் குடும்பத்தினருடன் செலவிட்டேன்.ராஜாசண்முகம், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் :ஒரு நாள் முழுவதும் குடும்பத்தினருடன் செலவிட்டேன். மனித குலத்துக்கே சவாலாக உள்ள வைரஸிடமிருந்து, தேசமும், பொருளாதாரமும் மீளவேண்டும் என, தனிமையில் அமர்ந்து பிரார்த்தித்தேன். பிரதமர் தெரிவித்தபடி, மாலை நேரம், கை தட்டினோம்; கோவில் மணியை ஒலிக்க செய்தோம். இது தேசத்துக்கான ஊரடங்கு என்பதில், மிகவும் பெருமையாக இருந்தது. தொடர்ந்து ஒன்றுபட்டு, கொரோனாவை கொல்வோம்.ராமநாதன், ஆடிட்டர் :மற்ற ஞாயிற்றுக்கிழைமைகளைவிட இது மாறுபட்டதாக இருந்தது. நாட்டின் நலனே முழு மூச்சாக கொண்டுள்ள பிரதமரின் அறிவிப்பை ஏற்று, நாள் முழுவதும் வீட்டில் அமைதியாக இருந்தேன்; வைரஸ் பிடியிலிருந்து தேசம் விரைவில் மீண்டெழவேண்டும் என பிரார்த்தித்தேன். மாலை, 5:00 மணிக்கு, சேவை செய்வோரை பாராட்டும்வகையில், கை தட்டினோம்.சிவராம், வெற்றி அமைப்பு :வழக்கமாக 30 நிமிடம் மட்டும் செய்யும் யோகாவை, ஒரு மணி நேரம் செய்தேன். சிறுவயதில் செய்ததுபோல், தலைக்கு எண்ணெய் தேய்ந்து, சூரிய குளியலிட்டேன். குழந்தைகளுடன் சேர்ந்து, வீட்டு தோட்டத்தில் பராமரிப்பு பணிகள் செய்தேன். மாலை, 5:00 மணிக்கு கை தட்டினோம். இந்த ஒருநாள்போன்று, தொடர்ச்சியாக பத்து நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது சிரமமானதுதான்.ஸ்ரீகாந்த், 'டெக்பா' தலைவர் :நீண்ட காலத்துக்குப்பின், நாள் முழுமையும் குடும்பத்தினருடன் செலவிடமுடிந்தது. தேசத்துக்காக ஒருநாள் அமைதியாக இருந்தது, பெருமை தருகிறது. செய்தித்தாள், சிறுகதை புத்தகங்கள் படித்தேன். கொரோனா விரைவில் கொல்லப்படவேண்டும் என பிரார்த்தித்தேன்.குமார் துரைசாமி, ஆடை ஏற்றுமதியாளர் :கொரோனா ஊரடங்கு என்பது, எனக்கு மட்டுமானதல்ல, இந்த தேசத்துக்கான பின்னடைவு. இந்த நிலையிலிருந்து விரைவில் மீள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்கிற சிந்தனையே முழு நேரமும் என்மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.அனைத்து நாட்டினருக்கும் கொரோனா பாடம் புகட்டியுள்ளது. ஆடை வர்த்தகர்கள் இனி, வர்த்தக யுத்திகளை மாற்றுவர். நாம் எத்தகைய வழிமுறையை பின்பற்றுவது; சர்வதேச வர்த்தக சந்தையில் நமக்கான இடத்தை எப்படி கைப்பற்றுவது, ஊரடங்கு நாளில் என யோசித்து கொண்டிருந்தேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X