பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலைப்படி மாஸ்க், சானிடைசர் விற்பனை செய்யப்படும்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையின் படி முககவசம் மற்றும் சானிடைசர் விற்பனை செய்யப்படும் என மருந்து வணிகர்கள் சங்க செயலர் செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மக்கள் சுய ஊரடங்கு மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் வேண்டுகொள் விடுத்தது. சுய ஊரடங்கு வெற்றிகரமாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.மருத்துவமனைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையேற்று தமிழகத்தில் 80 சதவீதம் மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.இது தொடர்பாக சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. முக கவசம் அனைவரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அச்சத்தால் மக்கள் அனைவரும் மாஸ்க் வாங்கி அணிந்து கொள்கின்றனர்.மாஸ்க் வாங்கி வீட்டிலும் ஸ்டாக் வைத்துள்ளனர். ஏற்கனவே இருந்த மாஸ்க்குகள் அனைத்தும் விற்று தீர்ந்ததாலும், புதியதாக தயாரிக்ககூடிய அளவு மிக குறைவாக இருப்பதால் மாஸ்க் தட்டுபாடு உள்ளது. மாஸ்க் தயாரிக்க கூடியவர்கள் விலையை கூட்டியதால், நாங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.நேற்று முன்தினம் தான் மத்திய அரசு மாஸ்க் மற்றும் சானிடைசருக்கு விலை நிர்ணயம் செய்து அறிவித்தது. 2 லேயர் மாஸ்க் அதிகபட்சம் 8 ரூபாய், மூன்று லேயர் மாஸ்க் அதிகபட்சம் 10 ரூபாய் எனவும், 200 மில்லி சானிடைசர் அதிகபட்சம் 100 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது.இது நேற்று முன்தினத்திலிருந்து தயாராகி வரக்கூடிய பொருட்களுக்கு பொருந்தும். அந்த விலை வந்தவுடன், நாங்களும் அதே விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளோம். தமிழக அரசும் முககவசம் சரியான விலைக்கு விற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதனையேற்று நாங்களும் விற்பனை செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட பொருளாளர் மதியழகன், வட்ட தலைவர் விஜியகுமார், நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, ராஜேந்திரன், செந்தில்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X