பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சள், வேப்பிலை கலந்த நீர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, திருக்காலிமேடைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அறக்கட்டளை குழுவினர், அப்பகுதி முழுவதும் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை தெளித்தனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, காஞ்சிபுரத்தில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, சுகாதாரத் துறை, நகராட்சி சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடைச் சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அறக்கட்டளையினர் ஒன்றிணைந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தனர்.அதன்படி, இக்குழுவினர், 15 கிலோ மஞ்சள் துாள் மற்றும் வேப்பிலையை, டிராக்டர் டேங்கில் போட்டு கலந்தனர்.

மஞ்சள் கலந்த அந்நீரை, திருக்காலிமேடில் உள்ள, 17 தெருக்களிலும், ஒவ்வொருவர் வீட்டு வாசல்களில் தெளித்தனர்.மேலும், திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்திலும், மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்தனர்.திருக்காலிமேடில் தெருக்கள் மற்றும் வீட்டு வாசலில், மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீரை தெளித்தபடியே சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X