சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

Added : மார் 24, 2020
Share
Advertisement

பொன்னேரி : புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பயணியர் இன்றி ரயில் நிலையங்கள் வெறிச்சோடின.

'கொரோனா' வைரஸ் பாதிப்புகளை தவிர்க்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், நேற்று முதல், பயணியர் ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.சென்னை- - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை இல்லாத நிலையில், நேற்று, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளை சேர்ந்த பயணியர், பஸ் போக்குவரத்தினை பயன்படுத்தினர். சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. பயணியர் இல்லாமல் நடைமேடைகள் வெறிச்சோடி கிடந்தன.

ரயில் நிலையங்களில் பயணியரை மட்டும் நம்பி தொழில் செய்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் பணியின்றி இருந்தனர்.நேற்று முன்தினம் ஊரடங்கு அறிவுறுத்தலை பின்பற்றிய பழவேற்காடு பகுதி மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.பேரிடர் காலங்களில் வருவாய் இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி, நேற்றும் தொழிலுக்கு செல்வதை தவிர்த்தனர்.கொரோனா அச்சம் காரணமாக வழக்கத்தினை விட பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்த்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X