சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ காப்பீடு மையம் மூடியதால் அவதி

Added : மார் 24, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் மையம், செங்கல்பட்டில் மூடப்பட்டதால், உடல்நிலை சரியில்லாத மூதாட்டி, ஏமாற்றத்துடன் சென்றார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட, மாவட்ட மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் மையம், 20ம் தேதி திறக்கப்பட்டது.இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, மேற்கண்ட அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.ஆனால், அலுவலக வளாகத்தில், அது குறித்த அறிவிப்பு எதுவும் எழுதி வைக்கவில்லை.

இதனால், நேற்று, அலுவலகம் வந்த முதியோர், நீண்ட நேரம் காத்திருந்து, அலுவலகம் திறக்கப்படாததால், ஏமாற்றத்துடன் சென்றனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி, காட்டாங்கொளத்துாரைச் சேர்ந்த தெய்வானை, 65, என்பவர் கூறியதாவது:எனக்கு, சிறுநீரக பாதிப்பு உள்ளதால், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பெறுகிறேன்.அறுவை சிகிச்சை செய்ய, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை வாங்கி வரும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.காப்பீட்டு அட்டை பெறுவதற்காக வந்தேன். அலுவலகம் திறக்கப்படாததால், நீண்ட நேரம் காத்திருந்து திரும்பினேன்.

எப்போது மருத்துவ காப்பீட்டு அட்டை வாங்கி, எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுமோ என, தெரியவில்லை. இதற்கு, மாற்றுவழியை, அரசு கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.அதேபோல், செங்கல்பட்டு அடுத்த, முள்ளிபாக்கம் முருகவேல் மனைவி சாந்தி, 28, என்பவரும், மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, நேற்று வந்து, ஏமாற்றத்துடன் சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X