கள்ளக்குறிச்சி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக வாகனங்களின் இயக்கம் குறைந்ததால் அறுவடை செய்த பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் மாவட்டத்திலுள்ள அனைத்து மார்க்கெட் கமிட்டிகளிலும் விளைபொருட்களின் வரத்து குறைந்துள்ளது.
கடந்த 15 நாட்களாக தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் ஒருநாள் முழுமையாக ஊரடங்கு அமலாக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அறுவடை செய்த தானியங்களை விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், உளுந்துார்பேட்டை தாலுகாவில் பயிர் செய்யப்பட்டிருந்த விளை பொருட்கள் தயார் நிலையில் இருந்தும் அறுவடை செய்யஇயலாத நிலை உள்ளது.அத்துடன் அறுவடை செய்த தானியங்களைக்கொண்டு செல்ல போதிய வாகன வசதியும் இல்லை.இதனால் மார்க்கெட் கமிட்டிகளில்விளை பொருட்களின்வரத்து கனிசமான அளவு குறைந்துள்ளது.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு வழக்கமாக நாள் தோறும் 1,500 மூட்டைகள் முதல் 2,000 மூட்டைகள் வரை தானிய வரத்துஇருக்கும்.தற்போது நாள் ஒன்றுக்கு 100 மூட்டைகள் வரை மட்டுமே வரத்து உள்ளது.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று எள்50 மூட்டைகள்,வேர்க்கடலை10, உளுந்து6,மக்காச்சோளம்5, கம்பு4, திணை3, ராகி, தட்டைப்பயறுதலா ஒரு மூட்டைவிற்பனைக்கு வந்தன.இதில்,சராசரியாக எள் 8,539 ரூபாய்க்கும், வேர்க்கடலை, 6,279,உளுந்து 6,823,மக்காச்சோளம் 1,261,கம்பு 2,109,திணை 3,889,ராகி 2,685,தட்டைப்பயறு 3,699 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு 62 விவசாயிகள் கொண்டு வந்த 80 மூட்டை விவசாய விளைபொருட்கள் சராசரியாக 5 லட்சத்து 63 ஆயிரத்து 670 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE