பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிலேயே பயிற்சி பெற்றால் 'விளையாடுது' கொரோனா!வீரர்கள் 'பிட்' ஆக இருக்கலாம்!

Added : மார் 24, 2020
Share
Advertisement
கோவை:''விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து, தசைகளை வலுப்படுத்திக் கொள்ளலாம்,'' என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் 'விளையாட்டு' காரணமாக, பொதுமக்கள் மட்டுமல்லாமல், விளையாட்டு வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி முகாம்கள், விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வீரர்கள் வீட்டில் ஓய்வில்

கோவை:''விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து, தசைகளை வலுப்படுத்திக் கொள்ளலாம்,'' என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் 'விளையாட்டு' காரணமாக, பொதுமக்கள் மட்டுமல்லாமல், விளையாட்டு வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சி முகாம்கள், விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வீரர்கள் வீட்டில் ஓய்வில் உள்ளனர்.சில குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு, தொடர் பயிற்சி மேற்கொள்ள தவறினால், போட்டிக்கு தேவையான 'பிட்னெஸ்' கிடைக்காது.ஒரு சில விளையாட்டு வீரர்கள், ஓய்வு நேரங்களை எப்படி தங்களை ஆரோக்கியமாகவும், உடலை வலுவாகவும் வைத்து கொள்வது பற்றி, தெரியாமல் உள்ளனர்.இது குறித்து மாவட்ட விளையாட்டு விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''கொரோனா வைரசால் விளையாட்டு உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியை தவிர, அனைத்து வகையான விளையாட்டுகளையும் நிறுத்தி உள்ளனர். வீரர், வீராங்கனைகள் ஓய்வில் உள்ளனர்.தற்போது கிடைத்துள்ள இடைவெளியில், வீரர்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து, தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி மேற்கொள்ளலாம். மீண்டும் போட்டிகள் நடக்கும் வரை, இதை பின்பற்ற வேண்டும்,'' என்றார்.
என்னென்ன பயிற்சி செய்யலாம்?1. வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நோய் தொற்று இல்லாத பகுதிகளில், சுய கட்டுபாட்டுடன் பயிற்சி மேற்கொள்ளலாம். 2. வாய்ப்பு இல்லாத வீரர்கள், வீட்டின் சிறிய அறையில் 'பிட்னஸ்' பயிற்சியான, 'ஸ்கிப்பிங்', தண்டால், 'ஸ்டெப்ஸ் ஒர்க் அவுட்' செய்து, தசைகளை வலுப்படுத்தி கொள்ளலாம். 3. உடற்பயிற்சிக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இவ்வகையான விஷயங்களை விளையாட்டு வீரர்கள் கடைபிடித்தால், ஓய்விலும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும் என்கிறார்ரவிச்சந்திரன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X