சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை வெட்டிய இருவரை கைது செய்ய உறவினர்கள் தர்ணா

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருத்தணி : முன் விரோதம் காரணமாக, வாலிபரை கத்தியால் வெட்டிய இருவரை கைது செய்ய வேண்டும் என, உறவினர்கள், அரசு மருத்துவமனை முன், தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருத்தணி தாலுகா, நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அப்பாஸ், 20. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் அஜித், 21, என்பவருக்கும், இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம், அப்பாஸ் அதே பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆறு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, முருகன் மகன் அஜித் மற்றும் அவரது நண்பன் அஜித், 20 ஆகிய இருவரும், கத்தியால் அப்பாசை தாக்கி, தலை, முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளில் வெட்டியதாக கூறப்படுகிறது.இதில், படுகாயம் அடைந்த அப்பாஸ், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை, அப்பாசின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன் அமர்ந்து, அப்பாசை வெட்டிய இரண்டு பேரையும் கைது செய்ய வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.சிறிது நேரத்தில், போலீசார் வந்து சமரசப்படுத்தி அனுப்பினர். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கடந்தாண்டு, டிசம்பர் மாதம், இருசக்கர வாகனத்தின் சாவியால் அப்பாஸ், அஜித்தின் கண் பகுதியில் குத்தியதால் முன்விரோதம் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X