பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்ரலில் கொட்டித்தீர்க்கும் கோடை மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை, ஒரு நாள் மட்டுமே கனமழை பெய்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கவும், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், கோடை மழை கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு கோடை மழையும், அதை தொடர்ந்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையும் நன்கு பெய்தன. அதன் பயனாக, குளம், குட்டைகள் நிரம்பின. வேளாண்மை செழிக்கவும், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கவும் கடந்தாண்டு பெய்த மழை பேருதவியாக இருந்தது.ஆனால், இந்தாண்டில் இதுவரை ஜனவரி 19 மற்றும் மார்ச் 21 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. கடந்த 21ல், வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையத்தில், 38 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.கோவையின் மொத்த மழைப்பொழிவில், குளிர்கால மழை 4 சதவீதம் மட்டுமே. அதாவது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், 23 மி.மீ., மழை பெய்யும். ஆனால் இந்தாண்டு, வெறும் 0.5 மி.மீ., மழை மட்டுமே, அந்த இரு மாதங்களில் மழை பெய்தது.அதனால் விவசாயிகள் கோடைமழையை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். அதை பூர்த்தி செய்யும் வகையில், மார்ச் 21ல் பெய்த கோடை மழையின், முதல் மழையே பெருமழையாக பொழிந்தது.'ஏப்ரல் மாதத்தில் கோடை மழைக்கு நல்ல வாய்ப்புள்ளது' என்று வானிலை மையத்தினர் தெரிவித்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விவசாய பணிகள் தொடரவும் கோடைமழை கைகொடுக்குமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.மார்ச் 21ல் மழை அளவுமேட்டுப்பாளையம் 31 மி.மீ.,வால்பாறை 10 மி.மீ.,பொள்ளாச்சி 85 மி.மீ.,கோவை தெற்கு 29 மி.மீ.,பெ.நா.பாளையம் 16 மி.மீ.,மாவட்ட சராசரி 16.23 மி.மீ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X