சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறவைகளை வேட்டையாடிய இருவர் தப்பியோட்டம்: பைக் பறிமுதல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மயில் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த களவனுார் அருகே நாட்டு துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் காட்டு பகுதிக்குள் வேட்டைக்குச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.அப்போது நாட்டு துப்பாக்கியுடன் பைக்கில் வந்த இருவரை நிறுத்தினர். ஆனால், அந்த நபர் பைக்கை நிறுத்தி விட்டு தப்பியோடினார்.போலீசார் பைக்கை சோதனை செய்ததில், நாட்டு துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட மயில், கொக்கு, அணில்,உள்ளிட்டவை இருந்தன.இதனால் பைக் மற்றும் வேட்டையாடப்பட்ட பறவைகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து உளுந்துார்பேட்டை வனச்சரக அலுவலர் காதர் பாட்ஷா வழக்குப் பதிந்து அவரது தலைமையில் வானவர் சபரிநாத், வானவர்கள் சரவணன், கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X