சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.20 கோடி மோசடி

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேலம்:சேலத்தில், 100க்கும் மேற்பட்டோரிடம், 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டு, மதுரைக்கு தப்பியவர்களை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம், மூன்று ரோடு ராமலிங்கா சந்திப்பில், குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை, மதுரை, பழங்காநத்தத்தைச் சேர்ந்த சரவணன், 40, ராஜேந்திரன், 38, ஆகியோர் நடத்தி வந்தனர்.இதில், 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். இந்த நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வாரத்துக்கு, 4 சதவீத வட்டி வழங்கப்படும். பணம் செலுத்தியதற்கு பத்திரம் வழங்கப்பட்டதோடு, பணத்துக்கு ஈடாக, ஓராண்டில் நிலம் வழங்கப்படும் என, ஆசை வார்த்தை கூறி, பணம் வசூலித்தனர்.இதில், 120க்கும் மேற்பட்டோர், 20 கோடி ரூபாய்க்கு மேல் கட்டினர். நிறுவனம் அளித்த வாக்குறுதிப்படி வட்டியோ, நிலமோ கொடுக்க வில்லை. மோசடி குறித்து, குற்றப்பிரிவு துணை கமிஷனர், செந்திலுக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், குளோபல் நிறுவனத்தில், 'ரெய்டு' நடத்தி, ஆவணங்களை கைப்பற்றினர். ஊழியர்கள், இரண்டு பேர் மட்டுமே போலீசில் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி நிறுவனத்தின் தலைவர்களான சரவணன், ராஜேந்திரன் ஆகியோர் மதுரை சென்று, அங்கு இது போல் மோசடி நிறுவனத்தை துவக்கி உள்ளதாக, சேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை தேடி, தனிப்படை போலீசார், மதுரைக்கு விரைந்துள்ளனர்.'குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள், புகார் அளிக்கலாம்' என, போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X