சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் படுகாயம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருத்தணி : தனியார் பஸ் மீது, வேன் மோதியதில் ஓட்டுனர் இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைத்தனர்.

திருவள்ளூர் அடுத்த, வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம் மகன் இமயவர்மன், 26. ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம், டாடா ஏசி வேன் மூலம், வேலுார் பகுதிக்கு சென்றார். அவரது உதவியாளராக, அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர், 16, என்பவர், சென்றிருந்தார். வேன், திருவள்ளூர் நோக்கி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, கனகம்மாசத்திரம் அடுத்த, புதுார் பஸ் நிறுத்தம் அருகே சென்றது.அப்போது, எதிரே வந்த தனியார் கம்பெனி பஸ் மீது மோதியது.

இதில், வேன் ஓட்டுனர் இமயவர்மன் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜசேகர் படுகாயம் அடைந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X