சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் வாகனங்கள் செல்ல தடை

Added : மார் 24, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தினமும், 1,000க்கும் மேற்பட்டோர், உள் நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை பார்க்க, உறவினர்கள் வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால், மருத்துவமனையில், முதல் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.

மற்ற நுழைவாயில்கள் திறக்கப்பட்டு, போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, மருத்துவமனைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவ-மனை அருகிலேயே, இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X