சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சரக்கு' அடித்து சூதாட்டம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருப்பத்துார்:திருப்பத்துாரில், சூதாட்டம் நடந்த ஆபீசர்ஸ் கிளப்பிற்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
திருப்பத்துாரில், அரசு அலுவலர்களுக்கான, 'ஆபீசர்ஸ் கிளப்' செயல்பட்டு வருகிறது. இதில், அரசு அலுவலர்கள் என்ற போர்வையில், தினமும் பலரும் அமர்ந்து, மது குடிப்பதும், சூதாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று முன்தினம், மக்கள் ஊரடங்கு குறித்து, மாவட்டம் முழுவதும், கலெக்டர், சிவன்அருள் ஆய்வு செய்தார். திருப்பத்துார், 'ஆபீசர்ஸ் கிளப்' வழியாக சென்றபோது, காரை நிறுத்தி, கிளப்பிற்குள் சென்று ஆய்வு செய்தார்.அங்கிருந்த வாலிபர்கள், அலுவலர்கள் கூட்டமாக அமர்ந்து, மது குடித்து கொண்டிருந்தனர். கலெக்டரை பார்த்ததும், அனைவரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அங்கு, சீட்டுக் கட்டுகள், மது பாட்டில்கள் கிடந்ததை கண்டு, கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக அந்த அலுவலக கட்டடத்துக்கு, 'சீல்' வைக்க, தாசில்தார் அனந்தகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். இதன்படி, ஆபீசர்ஸ் கிளப்பிற்கு நேற்று, 'சீல்' வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X