பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் ஆபீசில் கை கழுவ வசதி

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஊத்துக்கோட்டை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வட்டாட்சியர் அலுவலகத்தில் வருபவர்கள், தங்களது கைகளை சுத்தமாக கழுவும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, அரசு அலுவலகங்களில் வருபவர்கள் தங்களது கைகளை சுத்தமாக கழுவ, வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் மையம், இ- - சேவை மையம் செயல்படுகிறது. மேலும், பல்வேறு தேவைகளுக்கு, தினமும், 200க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வட்டாட்சியர் அலுவலக வாயிலில், கை கழுவுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கான ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் வருபவர்கள் கைகளை கழுவ வலியுறுத்தப்படுகின்றனர்.இதேபோல், ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும், மேற்கண்ட வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X