பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் அச்சம் உச்சத்தில் காய்கறி விலை

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருக்கோவிலுார்: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதால், பொதுமக்கள் காய்கறிகள் வாங்க கடைகளில் குவிந்ததால் விலை அதிகரித்தது.கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. என்றாலும் நோயின் வீரியம் மற்றும் வேகமாக பரவும் தன்மையை கருத்தில் கொண்டு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.மாவட்ட எல்லையை மூடவும், 144 தடை உத்தரவை அமல்படுத்தி, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகளை மூடவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள கடைகளில் நேற்று அதிகளவில் குவிந்தனர்.குறிப்பாக திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பெங்களூருவில் இருந்துதான் தினசரி காய்கறிகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக கர்நாடக, தமிழக அரசுகள் வாகன போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மேலும் பெங்களூரு காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி வரத்து பெருமளவில் குறைந்தது. ஒரு சில வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே நேற்று காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்து காணப்பட்டது.இதுபற்றி காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், 'பெங்களூருவில் இருந்து தான் லாரிகளில் தினசரி காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக காய்கறிகளை வாங்கி வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதனால் மொத்த வியாபாரிகள் சொல்லும் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று, விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை வாங்கி வருகிறோம். இதுவே காய்கறிகளின் விலை அதிகரிக்க காரணம். இந்நிலையில் பொதுமக்கள் காய்கறிகளை அதிக அளவில் வாங்கி குவிப்பதும் அதன் விலை ஏற்றத்திற்கு காரணம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
24-மார்-202010:08:29 IST Report Abuse
muthu Rajendran எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயம் என்பது தானே வியாபாரிகள் கதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X