பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் கண்காணிப்பில் காஞ்சிபுரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : கொரோனா வைரஸ் தடுப்பு நடடிக்கை குறித்து, கலெக்டர் பொன்னையா, நிருபர்களிடம், நேற்று கூறியதாவது :காஞ்சிபுரம் மாவட்டத்தில், 32 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, சுகாதார பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் நகரில் மட்டும், 13 குழுக்கள் பணியில் ஈடுபட உள்ளது.

வெளிநாட்டிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு திரும்பி, உடல் நிலை சரியில்லாத, 54 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த, 23 பேர் என, 77 பேர், தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.அவ்வாறு, தொடர் கண்காணிப்பில் ஈடுபடும் நபர்களின் வீடுகளுக்கு வெளியே, சுகாதாரத்துறை வழங்கிய, 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும்.மேலும், வெளி நபர்கள் அந்த வீட்டுக்கு வர கூடாது என்பதற்காக, போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

வெளிநாட்டிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் திரும்பிய நபர்கள், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்காவிட்டால், அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும்.பொதுமக்கள், 044 - 2723 7107, 2723 7207 ஆகிய தொலைபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X