சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பின்னலாடை உற்பத்தி நிறுத்தம்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement
 பின்னலாடை உற்பத்தி நிறுத்தம்

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை மற்றும் சார்பு நிறுவனங்கள், இன்று முதல், 31ம் தேதி வரை, உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து உள்ளன.
திருப்பூர் கலெக்டர், விஜயகார்த்திகேயன், நேற்று, தொழில் துறையினருடன் அவசர ஆலோசனை நடத்தினார். 'கொரோனா' தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், வரும், 31ம் தேதி வரை, அனைத்து நிறுவனங்களையும் மூட அறிவுறுத்தினார்.

இது குறித்து, ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் கூறியதாவது:இன்று முதல், அனைத்து தொழில் நிறுவனங்களிலும் உற்பத்தி நிறுத்தப்படும். தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.வெளிமாநில தொழிலாளர்களை பாதுகாப்பாக தங்க வைத்து, உணவு வசதி செய்து கொடுப்போம். தொழில் நிலை மோசமாக இருப்பதால், 31ம் தேதி வரை நிறுவனங்களை மூடுவதால், தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளிலும் சம்பளம் வழங்க இயலாது. மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர் திட்டங்கள் வாயிலாக, விடுப்பு சம்பளம் வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X