பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் தேர்வுக்கு முன்பாக சோப்பு போட்டு கைகளை கழுவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தமிழகம் முழுவதும் நேற்று 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத் தேர்வுகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று உயிரியல் மற்றும் வரலாறு தேர்வு நடந்தது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சோப்பு போட்டு கைகளை கழுவதின் அவசியம் குறித்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்வுக்கு முன்பாக மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அதில், அனைத்து மாணவிகளும் சோப்பு போட்டு கைகளை கழுவி விட்டு தேர்வு எழுதும்படி அறிவுறுத்தப்பட்டனர்.அதேபோல், முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் அனைவரும் சோப்பு போட்டு கைகளை கழுவி பணிகளை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X