சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகன அனுமதியில் குழப்பம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஊத்துக்கோட்டை : டூ - வீலர் உள்ளிட்ட வாகனங்களை, தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே, அனுமதிப்பதில் குழப்பம் ஏற்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நேற்று முன்தினம் நாடு முழுவதும், 'மக்கள் ஊரடங்கு' நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக- - ஆந்திர எல்லைகள் மூடப்பட்டன.நேற்று காலை, ஊத்துக்கோட்டையில் இருந்து, இரண்டு மாநில எல்லைக்கு லாரியில் அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. காலை முதல், ஊத்துக்கோட்டை அரசு பஸ் பணிமனையில் இருந்து குறைந்த பஸ்கள் இயக்கப்பட்டன.

நேற்று, காலை, 11:00 மணி அளவில், சத்தியவேடு சாலையில் உள்ள தமிழக- - ஆந்திர எல்லை திடீரென மூடப்பட்டன.பைக் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் அனுமதிக்கவில்லை. இதனால், இரண்டு எல்லைகளிலும், வாகனங்கள் அதிகளவில் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சுகாதாரம், வருவாய், காவல் உள்ளிட்ட துறை அதிகாரிகள் இருந்தும், ஒருங்கிணைக்க அதிகாரிகள் இல்லாததால், யாருடைய உத்தரவை பின்பற்றுவது என, தெரியாமல் இருந்தனர்.ஒரு மணி நேரத்திற்கு பின், அனைத்து வாகனங்களும் இரு மாநில எல்லைகளுக்கு அனுமதிக்கப்பட்டதால், போக்குவரத்து சீரானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X