போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

Added : மார் 24, 2020
Share

கள்ளக்குறிச்சி;கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்திடும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு துறைகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்ட நிலையில், நேற்று காவல் துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தனர்.நிகழ்ச்சியில், இருமலுடன் காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும். பொது இடங்கள் மற்றும் விழாக்களுக்கு செல்வதையும், கூட்டம் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். சோப்பு மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். அத்தியாவசிமான வேலைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும். சாலைகளில் கூட்டம் கூட்டமாக செல்ல கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X