பொது செய்தி

தமிழ்நாடு

எங்களுக்கு தேவை விளம்பரம் தான்...!

Added : மார் 24, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
 எங்களுக்கு தேவை விளம்பரம் தான்...!

தஞ்சாவூர்:கும்பகோணம் அரசு மருத்துவமனையில், 'கொரோனா' சிறப்பு சிகிச்சை மையத்துக்கு, 100 படுக்கைகளை வழங்குவதற்காக, தி.மு.க., - எம்.எல்.ஏ., 100 பேருடன் திரண்டது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
'கொரானோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்' என, மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.100 படுக்கைகள்இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், நேற்று, 100 படுக்கைகளை வழங்கினார்.இதற்காக, மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் ராமச்சந்திரன், சந்திரசேகரன், செழியன் மற்றும் கட்சியினர், 100க்கும் மேற்பட்டவர்கள், முகக் கவசம் கூட அணியாமல் திரண்டனர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரபாகரன் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.அலட்சியப் போக்குகொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், முகக்கவசம் கூட அணியாமல், இப்படி மொத்தமாக திரண்ட கூட்டத்தை பார்த்து, சிகிச்சைக்காக வந்த பலரும் பீதி அடைந்தனர். கொரோனாவால் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற சூழலில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் அலட்சிய போக்கு, நோயாளிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
28-மார்-202022:20:32 IST Report Abuse
bal ஏன்டா இப்படி கூடமா வரீங்க...அறிவில்லையா.
Rate this:
Cancel
Jayaraman Sekar - Bangalore,இந்தியா
28-மார்-202018:11:36 IST Report Abuse
Jayaraman Sekar வெறும் கட்டில் மட்டுமா? பெட் எல்லாம் கிடையாதா?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-மார்-202006:51:08 IST Report Abuse
Girija செய்கையில் குறை இருந்தாலும் ஈகையை போற்றவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X