பொது செய்தி

தமிழ்நாடு

பாஸ்போர்ட் அலுவலக சேவை ஏப்ரல் 7ம் தேதி வரை நிறுத்தம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பாஸ்போர்ட் அலுவலக சேவை நேற்று முதல் நிறுத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாஸ்போர்ட் சம்மந்தமான அனைத்து விசாரணைகளுக்கும் சென்னைக்கு சென்றனர். இதனால் மக்களுக்கு பண செலவு, காலவிரயம், வீண் அலைச்சல் ஏற்பட்டது.இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி கள்ளக்குறிச்சி தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது.இந்த அலுவலகத்தில் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், தொலைந்து போன மற்றும் சேதமடைந்த பாஸ்போர்ட் பெறுதல் உள்ளிட்டவைக்கான விசாரணை நடக்கிறது. நாள்தோறும் 40 பேர் விசாரணைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேற்று காலை பாஸ்போர்ட் அலுவலக சேவை நிறுத்தப்பட்டது. வரும் ஏப்ரல் 7ம் தேதி வரை பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் நிறுத்தப்படுவதாகவும், மறு அறிவிப்பு செய்த பிறகு மீண்டும் நடைபெறும் எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X