பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுக்க சிறையில் சிறப்பு வார்டு: கைதிகளுக்கு பரிசோதனை; உறவினர்களுக்கு தடை

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள, கோவை மத்திய சிறையில் இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.கோவை மத்திய சிறையில், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என, 2,000க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கைதிகளை பார்க்க, உறவினர்களுக்கும், வக்கீல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜாமின் வழங்கப்பட்ட கைதிகளை, உடனடியாக விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள், புதிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என பரிசோதிக்க, சிறை மருத்துவமனையில் இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தண்டனை கைதிகளுக்கு, காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டறிய, 'தெர்மல் ஸ்கேனர்' பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. உடலில் அதிக வெப்பம் இருந்து, சளி, இருமல் காணப்பட்டால், அவர்களை உடனடியாக, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதே போல, விசாரணை கைதிகள் மற்றும் புதிய வழக்கில், 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உள்ளான கைதிகளை, சிறப்பு வார்டில் தீவிர பரிசோதனைக்கு பிறகே, சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X