சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடும் லாரியில் தள்ளி தாயை கொன்ற மகன்

Added : மார் 24, 2020
Share
Advertisement

வேலுார்:காதலை கண்டித்த தாயை, லாரியில் தள்ளி கொலை செய்த, கொடூர மகனை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி, ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர், கலைவாணி, 42; கணவர் இறந்து விட்டார். விக்ரம், 22, என்ற மகனும், நர்மதா என்ற மகளும் உள்ளனர்.ஆறு மாதங்களுக்கு முன், கலைவாணி, மகன், மகளுடன், பள்ளிகொண்டாவை அடுத்த ஒக்கணாபுரத்தில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்குள்ள தனியார் பள்ளியில், ஆயாவாக பணியாற்றினார். விக்ரமுக்கு மதுப் பழக்கம் இருந்ததால், தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததை, கலைவாணி கண்டித்துள்ளார்.மேலும், கலைவாணிக்கும், விக்ரம் காதலிக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது.இதையறிந்த விக்ரம், 21ம் தேதி இரவு, தன் தாயுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்து உதைத்துள்ளார். பின், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், கலைவாணி சடலமாக கிடந்தார்.போலீஸ் விசாரணையில், 21ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில், தாயை விக்ரம் அடித்து உதைத்துள்ளார். வலி தாங்க முடியாமல், வீட்டிலிருந்து வெளியே வந்து, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய அவரை, எதிரில் வந்த கன்டெய்னர் லாரியில், விக்ரம் தள்ளி விட்டுள்ளார். இதில், லாரி சக்கரத்தில் சிக்கிய கலைவாணி, பலியானார். பள்ளிகொண்டா போலீசார் விசாரணையில், தாயை கொலை செய்ததை, விக்ரம் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X