பொது செய்தி

தமிழ்நாடு

அகதிகள் முகாம்களிலும் 'கொரோனா' கண்காணிப்பு  

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோவை;கோவை மாவட்டத்தில் செயல்படும் நான்கு அகதிகள் முகாம்களிலும், கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில், ஆனைமலை பகுதியில் கோட்டூர், ஆழியார் பகுதிகளிலும், மேட்டுப்பாளையத்தில் வேடர் காலனி மற்றும் பூலுவப்பட்டி ஆகிய நான்கு இடங்களில், இலங்கை அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உரிய விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நான்கு முகாம்களையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கைகளை கழுவவும், கிருமிநாசினி பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்த, உரிய வழிகாட்டுதல் பொறுப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X