சம்பவம் செய்தி

தமிழ்நாடு

16 கோடி முட்டைகள் இருப்பு பண்ணையாளர்கள் கவலை

Added : மார் 24, 2020
Share
Advertisement
 16 கோடி முட்டைகள் இருப்பு பண்ணையாளர்கள் கவலை

நாமக்கல்;''கொரோனா பீதியால், 16 கோடி முட்டைகள், குளிர்பதன கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன,'' என, தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறினார்.
அவர் கூறியதாவது:'கொரோனா' பீதி காரணமாக, தினமும், 4 கோடியாக இருந்த முட்டை உற்பத்தி, 1 கோடியாக சரிந்துள்ளது. கோழிகளுக்கு, ஒரு வாரத்துக்கு அளிக்கும் வகையில் தீவனம் உள்ளது. அதன்பின், தீவனம் அளிக்க முடியாது.காரணம், தீவன லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவனம், முட்டை, கறிக்கோழி ஆகியவற்றை ஏற்றி வரும் வாகனங்களை தடை செய்யக்கூடாது.தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை, கறிக்கோழி நுகர்வு அதிகரித்து உள்ளது. ஆனால், முட்டை, தீவன லாரிகளை தடுக்கும் பட்சத்தில், பண்ணையாளர்களுக்கு மேலும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.கடந்த, 22 நாட்களில் மட்டுமே, முட்டை மூலம், 300 கோடி ரூபாய், கறிக்கோழி மூலம், 500 கோடி ரூபாய் என, மொத்தம், 800 கோடி ரூபாய், பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.விற்பனையின்றி தேக்கமடைந்த முட்டைகள், உத்தரபிரதேசம், பீஹார், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. அம்மாநிலங்களில், 10 கோடி முட்டைகள், தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தில், 6 கோடி முட்டைகள் என, 16 கோடி முட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X