பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் ஊரடங்கு! பொள்ளாச்சி பொதுமக்கள் பேட்டி

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தொடர் ஊரடங்கு! பொள்ளாச்சி பொதுமக்கள் பேட்டி

கொரோனா வைரஸ்சை முற்றிலும் அழிக்க, ஒரு வாரத்துக்கு மேலாக தொடர் ஊரடங்கு நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும். மக்கள் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.கணேசன், 50, துணி வியாபாரி,கிணத்துக்கடவு.'கொரோனா' அறிந்தேன்!ஞாயிற்றுக்கிழமையில் நண்பர்களுடன் வெளியில் செல்லாமல், ஊடரங்கு உத்தரவால் வீட்டிலேயே இருந்தேன். நேரத்தை பெற்றோருடன் கழித்ததுடன், நாளிதழ்கள், சேனல்களில் கொரோனா வைரஸ் குறித்த பல தகவல்களை தெரிந்துகொண்டேன்.எம்.பிரதீப், 24,தனியார் கம்பெனி ஊழியர், கோட்டூர்.பயணம் தவிர்க்கணும்!விழிப்புணர்வுடன் செயல்பட்டால், கொரோனா பாதிப்பின்றி இருக்கலாம். கொரோனா பரவாமல் தடுக்க, கை கழுவுதல் அவசியம், வெளியூர்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.ஜெயதேவி, 21,கல்லுாரி மாணவி, வால்பாறை.வெளியே வரவில்லை!கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டேன். பல தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.எம்.அரவிந்த், 23,கல்லுாரி மாணவர், கோட்டூர்.பேரிடர் காலம்!சுய ஊரடங்கு அன்று, சர்வீஸ் ஸ்டேஷனுக்கு விடுமுறை விட்டோம். பரபரப்பான வாழ்க்கையில், வெளியே எங்கும் செல்லாத ஒரு நாள், வித்தியாசமாகவும், ஆசுவாசமாகவும் இருந்தது. பேரிடர் காலத்தில் அரசுக்கு ஒத்துழைத்த திருப்தியும் கிடைத்தது.ராம்தினேஷ், 37,சர்வீஸ் ஸ்டேஷன் உரிமையாளர், பொள்ளாச்சி.விழிப்புணர்வு கிடைத்ததுகொரோனா பரவலை தவிர்க்க, கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெளியுலகில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அறிந்திருந்தேன். நோய் பரவுவதை தடுக்க, வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.தமிழரசன், 30,தனியார் நிறுவன ஊழியர், பொள்ளாச்சி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்-202014:27:07 IST Report Abuse
Ram Pollachi காசு, பணம், சொத்து இருந்து என்ன பிரயோஜனம். உயிரை காப்பாற்ற கையை கழுவ வைச்சிட்டயே கொரோனா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X