பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னை வராமல் கண்காணிக்க அறிவுறுத்தல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருத்தணி : ஊராட்சிகளில், குடிநீர் பிரச்னை வராமல் கண்காணிக்க வேண்டும் என, ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருத்தணி ஒன்றியஅலுவலகத்தில், ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் ஆலோசனை கூட்டம்,ஒன்றிய குழு துணைத் தலைவர், ஏ.ரவி தலைமையில் நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர், பாபு வரவேற்றார். இதில், எந்தந்த ஊராட்சியில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அதை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து, ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலர்களிடம் கேட்டறிந்தனர்.மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு, பொதுமக்கள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராமங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் எனவும், கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர், ரேணுகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X