தமிழ்நாடு

போனில் தொற்றி பரவும் ஹலோ... கொரோனா! பாதுகாக்க இதோ 'டிப்ஸ்!'

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement
 போனில் தொற்றி பரவும் ஹலோ... கொரோனா! பாதுகாக்க இதோ 'டிப்ஸ்!'

கோவை:-நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பீதி தொற்றியுள்ள நிலையில், நம்மை மட்டுமல்லாமல் மொபைல்போன், லேப்டாப் மற்றும் தனிப்பட்ட கேட்ஜெட்களையும், கவனமாக பார்த்து கொள்வது மிகவும் அவசியம்.
இதன் வாயிலாக, வைரஸ் நம்மை தொற்றாமல் பார்த்துக் கொள்ளலாம்.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் அதிகளவு ஒன்று கூடும் இடங்களை தவிர்ப்பது, மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது போன்றவற்றை செய்கின்றனர்.
அதேநேரம் மொபைல்போன், லேப்டாப்களில் வைரஸ், பாக்டீரியா பரவுவதற்கான சாத்தியம் அதிகளவு இருப்பதாக, சுகாதார ஆராய்ச்சி அறிக்கைகள் எச்சரிக்கின்றன. மொபைல்போன், லேப்டாப்பில் பாக்டீரியா இருந்தால், கைகளை கழுவினாலும், தொற்று நோயில் இருந்து, பாதுகாத்து கொள்ள முடியாது.இதனால் கேஜெட்களை, மிகவும் சுத்தமாக வைத்துகொள்வது அவசியமாகும்.
இதுகுறித்து, சில நடைமுறைகளை சுகாதார ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.என்னென்ன செய்யலாம்?* மொபைல்போனில் இருந்து பேச, 'ஹெட்போன்'களை பயன்படுத்தலாம். இது, முகத்துக்கு வைரஸ் செல்வதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.
பேன்ட்ஸ் பாக்கெட்டில் ஒரே இடத்தில் மொபைல்போன் மற்றும் கைக்குட்டை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
அலுவலகங்களில் பொது கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது, கிருமி நாசினிகளை பயன்படுத்தலாம்.
மொபைல்போன்களை சுத்தப்படுத்த, குறைந்தபட்சம், 60 சதவீதம் ஆல்கஹால் அடிப்படையிலான 'வைப்ஸ்' பயன்படுத்தலாம்.
வாட்டர் ப்ரூப் ஸ்மார்ட்போன் என்றால், அதை சோப் மற்றும் தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தலாம்.
ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய கிருமி நாசினிகள், ஆல்கஹால் போன்ற கிளீனர்களை நேரடியாக பயன்படுத்த கூடாது. மைக்ரோ பைபர் கிளீனிங் கிளாத் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
பேப்பர் டவலில் கிருமி நாசினியை போட்டு சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்யும் முன், ஸ்மார்ட்போனை, 'சுவிட்ச்ஆப்' செய்ய வேண்டும்.
கிருமி நாசினியை பயன்படுத்தி, லேப்டாப்பின் ஒவ்வொரு மூலையையும் டிஸ்யூ பேப்பர் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
அப்போது லேப்டாப்பை 'ஆப்' நிலையில் வைக்க வேண்டும்.
ஹெட்போனையும் சுத்தம் செய்ய மறக்க கூடாது. இதனை சுத்தம் செய்ய எந்த கிருமி நாசினியையும் பயன்படுத்தலாம்.
லேப்டாப், மொபைல் போன்களை சுத்தம் செய்தபின், கைகளை சோப் மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
எவ்வளவு பெரிய வி. ஐ.பி., ஆக இருந்தாலும், அவரிடம் மொபைல் போனை கொடுத்து 'செல்பி' எடுக்கக்கூடாது.கேஜெட்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, தவறாமல் சுத்தம் செய்ய பழக வேண்டும். வேறொருவரின் மொபைல்போன் அல்லது லேப்டாப்பை தொடாமல் தவிர்க்கலாம்.அதேபோன்று உங்கள் கேட்ஜெட்டையும் மற்றவர்களுக்கு வழங்குவதை தவிர்க்கலாம். இதன் வாயிலாக, கிருமி தொற்று பரவுவதை தவிர்க்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X