பொது செய்தி

தமிழ்நாடு

கல் அரவை ஆலை கழிவு நீரால் கிராமங்களில் சுகாதாரமற்ற குடிநீர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

உத்திரமேரூர் : மதுார் அருகே, சாலை ஓரத்தில் தேங்கும் எம்.சாண்ட் கழிவு நீரால், சுற்று வட்டார கிராமங்களில், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகிக்கும் நிலை உள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுார், சித்தாலப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில், ஏராளமான கல் அரவை மற்றும் செயற்கை மணல் தயாரிக்கும் எம்.சாண்ட் ஆலைகள் இயங்குகின்றன. இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், மதுார்- - சித்தாலப்பாக்கம் சாலை ஓரத்தில் தேங்கி நிற்கிறது.கழிவு நீர் நிற்கும் இடத்தில், திருமுக்கூடல் பாலாற்றில் இருந்து, படூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக செல்லும் குடிநீர் பழுப்பு புதைக்கப்பட்டு உள்ளது.இந்த குடிநீர் பழுப்பில் உடைப்பு ஏற்படும்போது, குடிநீரோடு கழிவு நீர் கலந்து, படூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்படுகிறது.

இதனால், படூர் கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் பெறும் கிராமங்களில், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகிக்கும் நிலை உள்ளது.எனவே, மதுார்- - சித்தாலப்பாக்கம் சாலை ஓரங்களில், எம்.சாண்ட் கழிவுகள் வெளியேற்றுவதை தடுத்து, கழிவு நீர் தேக்கத்திற்கு காரணமாக ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X