இந்தியா

சேதமடைந்த மின்கம்பத்தால் புதுநகரில் விபத்து அபாயம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருக்கனுார்: செட்டிப்பட்டு புதுநகரில் சேதமடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு புதுநகர், பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு செட்டிப்பட்டு ராஜா வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், செட்டிப்பட்டு புது நகர் பிள்ளையார் கோவில் அருகே திருக்கனுார் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகம் மூலம் அமைக்கப்பட்ட சிமென்ட் மின்கம்பம், கடந்த ஓராண்டிற்கு முன் சேதமடைந்து காரைகள் உடைந்து விழுந்ததுடன், கம்பிகள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டது.இதனையடுத்து மின்துறை அதிகாரிகள் மூலம் சேதமடைந்த மின் கம்பத்தின் அருகே புதிதாக சிமென்ட் மின்கம்பம் அமைத்தனர். ஆனால், மின் இணைப்புகள் மாற்றி அமைக்கவில்லை.இதன் விளைவாக சேதமடைந்த மின்கம்பம் எந்நேரத்திலும் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சேதமடைந்த மின்கம்பத்தின் இணைப்புகளை உடனடியாக புதிய மின் கம்பத்திற்கு மாற்றி அமைத்து, சேதமடைந்த பழைய கம்பத்தை அகற்ற மின்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X