வடவள்ளி அபார்ட்மென்டில் மின்விபத்து அபாயம்!

Added : மார் 24, 2020
Share
Advertisement

மின் விபத்து அபாயம்வடவள்ளி, வள்ளலார் நகர், தக் ஷா அபார்ட்மென்ட்டில், மின் பெட்டி அருகில் தேங்கியுள்ள நீரால், மின் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.- நரசிம்மன், வள்ளலார் நகர்.

குப்பை அள்ளுவதில்லைஜி.என்.மில்ஸ் சேடன் தோட்டம் ரோட்டில், குவியும் குப்பை அப்புறப்படுத்தப்படாமல் குவிந்துள்ளது. துர்நாற்றம் வீசுவதால், இவ்வழியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.- வெங்கடகிரி, சேடன் தோட்டம்.

போக்குவரத்து நெரிசல்மருதமலை ரோடு, வடவள்ளி கருப்பராயன் கோவில் அருகில், பிரதான சாலையின் பாதி அளவுக்கு, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பார்க் செய்யப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- பாஸ்கரன்,

வடவள்ளி.

சாக்கடை கால்வாய் அடைப்புஒண்டிப்புதுார் காந்தி நகர் 2ல், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சுதாகர், ஒண்டிப்புதுார்.

குழாய் உடைப்பு; குடிநீர் வீண்மாநகராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட, பி.என்.புதுார், பெருமாள் கோவில் பஸ் ஸ்டாப் அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் விணாக சாலையில் ஓடுகிறது.- ரவி, பொன்னுசாமி நகர்.

சுகாதார சீர்கேடுசாய்பாபா காலனி, கே.கே.புதுார், ஐந்தாவது வீதி, அழகண்ணன் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- செல்வராஜ், கே.கே.புதுார்.

நிரம்பி வழியுது தொட்டிராம் நகர், சரோஜினி வீதியில் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. துப்புரவாளர்கள் இதை முறையாக அள்ளுவதில்லை.- பாலசந்தர், ராம்நகர்.

எச்சில் துப்பும்இடமா இதுகோவை நேரு ஸ்டேடியத்தில் செயல்படும் ஆவின் பாலகம் அருகில், கோ ஆப் டெக்ஸ் எதிரில் உள்ள, மரத்தை சுற்றிலும் எச்சில் துப்புகின்றனர். இதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆறுமுகம், காந்திபுரம்.

சாலையை விரிவுபடுத்தணும்ராமநாதபுரம், திருவள்ளுவர் நகரில் குறுகலாக உள்ள சாலையால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்த வேண்டும்.- கஸ்துாரி, திருவள்ளுவர் நகர்.

கனரக வாகனங்களால் தொல்லைதுடியலுார் - சரவணம்பட்டி ரோட்டில் போக்குவரத்து மிகுந்துள்ள காலை நேரத்தில், கனரக வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும்.- அசோக்குமார், இடிகரை.

பாதியில் நின்றது பணிஎன்.எஸ்.ஆர்., ரோடு - கே.கே.புதுார் ரோட்டில், சாலை செப்பனிடும் பணி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், சாலை முழுவதும் சிறு ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- நடராஜன், சாய்பாபா காலனி.

தெரு நாய் தொல்லை அதிகரிப்புசுந்தராபுரம் - போத்தனுார் செல்லும் சாரதா மில் ரோடு, அரசன் தியேட்டர் அருகில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அங்குமிங்கும் இவை ஓடுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்; விபத்துக்குள்ளாகின்றனர்.-செந்தில்குமார், போத்தனுார்.

கால்நடைகளுக்கு ஆபத்துசெல்வபுரம், முத்துசாமி காலனி, எஸ்.ஏ.கார்டனில், குவிந்துள்ள குப்பையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை கால்நடைகள் உட்கொள்வதால், அவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.- ராஜூ, எஸ்.ஏ.கார்டன்.

பள்ளி அருகே அசுத்தம்மாநகராட்சி 74வது வார்டுக்கு உட்பட்ட, ஜி.எம்.நகரில் உள்ள பள்ளி அருகில், குப்பை குவிக்கப்படுகிறது. இதை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.- ஷாநவாஸ், ஜி.எம்.நகர்.

மின் விபத்து அபாயம்நீலிக்கோணாம்பாளையம், ஜெயா நகர் முதல் வீதியில், மின் கம்பிகளை உரசிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.- கார்த்திக்,

ஜெயா நகர்.

ஆக்கிரமிப்பு அதிகரிப்புமக்கள் வஅதிமாநகராட்சி, 31வது வார்டுக்கு உட்பட்ட, சரவணம்பட்டி, பூந்தோட்டம் நகரில் சாலையை ஆக்கிரமித்து, கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அகற்ற வேண்டும்.- சந்திரன், சரவணம்பட்டி.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட, சுண்டப்பாளையம், செங்காப்பிடாரி அம்மன் கோவில் வீதியில், சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்பால், கழிவுநீர் செல்ல வழியில்லை. - பார்த்திபன், சுண்டப்பாளையம்.

குப்பை குவியல்துர்நாற்றம் தாங்கலபுலியகுளம், சவுரிபாளையம் ரோட்டில் சாலையோரம் குவிந்துள்ள குப்பை, வாரக்கணக்கில் அள்ளப்படாமல் உள்ளது.-பன்னீர்செல்வம், சவுரிபாளையம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X