சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கொள்ளை கும்பல்கள் மோதல்

Added : மார் 24, 2020
Share
Advertisement
 மணல் கொள்ளை கும்பல்கள் மோதல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில், மணல் கொள்ளை பிரச்னையில், வாலிபர் ஒருவரை கார் ஏற்றி கொன்றதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேவிபட்டினத்தை சேர்ந்த காளியப்பன் மகன் அரவிந்தன்; மணல் விற்பனை செய்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், தேவிப்பட்டினம் ரோட்டில், இருசக்கர வாகனத்தில், மைத்துனர் கல்யாணகுமாருடன் சென்றார்.போராட்டம்அப்போது, காரில் வந்த நபர்கள், இருசக்கர வாகனத்தில் மோதினர். இதில், காயமடைந்த கல்யாணகுமாரும், அரவிந்தனும், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, அரவிந்தன் பலியானார்.கொலையாளிகளை கைது செய்யக்கோரி, அரவிந்தன் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். தேவிபட்டினம் போலீசார் விபத்து வழக்கை நேற்று கொலை வழக்காக பதிவு செய்தனர். பின், அரவிந்தனின் சகோதரர் வைரவகேசு புகாரில், பெருங்குளத்தை சேர்ந்த சரவணன் 23, தேவிபட்டினம் சேதுபதி 25, நாகாச்சியை சேர்ந்த கார்த்திக் 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர். மணல் கொள்ளை பிரச்னையில், பாலா என்பவரின் தரப்பினர், அரவிந்தன், கல்யாணகுமார் சென்ற வாகனத்தின் மீது காரில் சென்று மோதியது, விசாரணையில் தெரியவந்தது.
இளம்பெண் கொலைபல்லடம் அருகே, இளம்பெண்ணை இரு துண்டுகளாக வெட்டிக்கொன்று, உடல் பாகம் எரிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரைப்புதுாரில், நேற்று காலை, 5:30 மணியளவில், சாலையோர புதர் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள், தண்ணீர் ஊற்றி அணைத்த போது, பெண்ணின் உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது.அதுவும், தலையில் இருந்து வயிற்றுப்பகுதி வரையிலான உடல் தான், அங்கு இருந்தது. வயிற்றுக்கு கீழ், பாதம் வரையிலான பகுதி, எங்கே என்று தெரியவில்லை.தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். பின், உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மற்றொரு பாகம்போலீசார் கூறியதாவது:இறந்தவர், 25 வயது மதிக்கத்தக்க பெண். பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா, வெட்டப்பட்ட உடலின் மற்றொரு பாகம் எங்கே என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பெண் யாரென்பது தெரியவந்தால், விசாரணையை தீவிரப்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X