பொது செய்தி

தமிழ்நாடு

மல்லி பூ கிலோ ரூ.150

Added : மார் 24, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், மல்லிகை பூ வாங்க, வியாபாரிகள் முன்வராததால், விலை சரிந்துள்ளது.

காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டுக்கு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து, ரோஜா பூக்கள் வந்தன. தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பூக்கள் வரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.இதனால், காஞ்சிபுரம், அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மல்லிகை, காக்கட்டான் மல்லி, விருட்சை, கனகாம்பரம் ஆகிய பூக்கள் மட்டும் வருகின்றன. இவற்றை வாங்க, வியாபாரிகள் யாரும் விரும்பாததால், இப்பூக்களின் விலை சரிந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, பூ மொத்த வியாபாரி ஆனந்தன் கூறியதாவது:சில மாதங்களுக்கு முன், மல்லிகை பூ, கிலோ, 1,000 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. தற்போது, மல்லிகை விளைச்சல் இருக்கிறது. வழக்கமாக, தக்கோலம், செய்யாறு, அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இருந்து, பூக்கள் வாங்க வரும் வியாபாரிகள், கொரோனா பீதியில் வரவில்லை.மேலும், முகூர்த்தமும் இல்லாததால், தற்போது, கிலோ மல்லிகை, 150 ரூபாய்க்கும், கனகாம்பரம், 300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவற்றை, உள்ளூர் சில்லரை வியாபாரிகள் மட்டும் வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X