இந்தியா

அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி பேராசிரியர்கள்மாணவ-மாணவிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதுச்சேரியில் வரும் 31ம் தேதி பள்ளி-கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கலிதீர்த்தாள்குப்பம்காமராஜர் அரசு கல்லுாரி முதல்வர் பாபு உத்தரவின் பேரில், கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லுாரியில் பயிலும் மாணவ-மாணவிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பணியில் கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவர் சவுந்தரவள்ளி, கணிதத் துறை தலைவர் கனகவேல், வணிகவியல் துறை தலைவர் செந்தமிழ்ராஜா, சுற்றுலாதுறை தலைவர் கதிர்வேல், கணினித்துறை தலைவர் வைத்தியலிங்கம் ஆகியோர் தலைமையில் இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X