பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 பொதுத்தேர்வு 981 பேர் 'ஆப்சென்ட்'

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோவை:நேற்று நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில், 981 பேர் பங்கேற்கவில்லை.கோவை மாவட்டத்தில், 357 பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 1 மாணவர்களுக்கு 116 மையங்களில் பொதுத்தேர்வு நடந்தது.தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட ஒன்பது பாடங்களுக்கான தேர்வில், 13 ஆயிரத்து 337 பேர் பங்கேற்றனர்; 981 பேர் தேர்வு எழுத வரவில்லை.தேர்வு துவங்கும் முன், அனைத்து மையங்களிலும் கிருமிநாசினி தெளித்தல், மாணவர் அமரும் இருக்கைகளை சுத்தப்படுத்துதல், கிருமிநாசினி, சோப்பு கொண்டு மாணவர்கள் கைகளை சுத்தப்படுத்திய பின்பு தேர்வெழுத அனுமதித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் என, தேர்வுப்பணியில் ஈடுபட்ட அனைவரும், மாஸ்க் அணிந்திருந்தனர். எந்த புகாருக்கும் இடமளிக்காத வகையில், தேர்வு நடந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X