பொது செய்தி

தமிழ்நாடு

அவசர சிகிச்சை, தொடர் காய்ச்சல் இருந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வாங்க!

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருத்தணி : அவசர சிகிச்சை, தொடர் காய்ச்சல் இருந்தால் மட்டுமே, அரசு மருத்துவமனைக்கு வாருங்கள். தேவையில்லாமல் மருத்துவமனையில் கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும் என, தலைமை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து மக்கள் இடையே சுகாதார துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சீ.ராதிகாதேவி கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அவசர சிகிச்சை, தொடர் காய்ச்சல் மற்றும் தவிர்க்க முடியாத காரணத்தால் மருத்துவமனைக்கு வர வேண்டிய சூழ்நிலை இருந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்.மருத்துவமனைக்கு உள்ளே வரும் போதும், வெளியே செல்லும் போதும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

சிகிச்சைக்காக வருபவர் கள் ஒவ்வொருவருக்கும், 1 மீட்டர் துாரம் இடைவெளி நின்று சிகிச்சை பெற வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் தான் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குழந்தைகளை சாலை, தெருக்களில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் அறிகுறி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நம் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைத்து, அங்கு, 10 படுக்கைகள் உட்பட, அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் என, நான்கு குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒரு குழுவிற்கு, ஒரு வாரம் தனிமைப்படுத்தும் விதத்தில் அவர்களை வேலைக்கு வராமல், வீட்டிலேயே ஓய்வு எடுக்க அறிவுறுத்தி வருகிறோம்.காரணம் மருத்துவமனையில் அதிகளவில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், அரசு ஆணையின் படி செயல்முறை படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X