இந்தியா

மீன் பிடிக்க செல்ல வேண்டாம் காரை., மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

காரைக்கால்;கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு, மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம், மீனவர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி வைரஸ் தொற்றை தடுக்க காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும், இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது. மேலும் இதை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகவலை மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X