பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியிலும் ஊரடங்கு

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரி மாநிலத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வரும், 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள், அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும். வெளியே வரும் நபர்கள், போலீசாரால் கண்காணிக்கப்படுவர்.மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், மதுக் கடைகள், 31ம் தேதி வரை மூடப்படும். ஓட்டல்களில் சாப்பிட அனுமதியில்லை. பார்சல் வாங்கிச் செல்லலாம். 'ஆன்லைன்' உணவு சப்ளை நிறுவனங்களுக்கும், 31ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை தயவு செய்து ரத்து செய்யுங்கள். துக்க நிகழ்ச்சியை, மூன்று மணி நேரத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும்.காய்கறி மற்றும் பழக்கடைகள், பால் பூத், ஓட்டல்கள் திறந்திருக்கும். பெட்ரோல் பங்க், காஸ் வினியோகம் இருக்கும். பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படும். இருசக்கர வாகனத்தில் கூட யாரும் வெளியே வரக்கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X