இந்தியா

பைபர் படகுகள் எரிப்பு: புதுக்குப்பத்தில் பரபரப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement
 பைபர் படகுகள் எரிப்பு: புதுக்குப்பத்தில் பரபரப்பு

பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்துள்ள புதுக்குப்பம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பைபர் படகுகள், மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்த வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் மக்கள் ஊராடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, கிருமாம்பாக்கம் அடுத்த புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை, கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.அதேகிராமத்தை சேர்ந்த காத்தாண்டி என்பவர் நேற்று முன்தினம் அதிகாலை எழுந்து கடற்கரைக்கு சென்றபோது, அங்கு நிறுத்தி வைத்திருந்த பைபர் படகுகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டு கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்து கடல் நீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பைபர் படகு என்பதால், தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. பாகூர் தீயணைப்பு வீரர்கள், நிலைய அதிகாரி பக்கிரி தலைமையில் விரைந்து சென்று வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும், தீ விபத்தில் அதேகிராமத்தை சேர்ந்த முருகன்,48; என்பவருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகும், ராமநாதன்,34; என்பவரின் ஒரு படகும், அதில் இருந்த வலைகள், என்ஜின் உள்ளிட்ட அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு முருகனுக்கு, சொந்தமான மீன்பிடி வலை, என்ஜின் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.மீனவ கிராமத்தில் மூன்று படகுகள் எரித்த சம்பவத்தினால், புதுக்குப்பம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X