இந்தியா

சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை தேவை

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி: மதகடிப்பட்டு நான்குமுனை சாலை சந்திப்பில் சேதமடைந்துள்ள பஸ் நிறுத்த நிழற்குடையால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி எல்லைப் பகுதியான மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பு வழியாக நெட்டப்பாக்கம், கடலுார், வில்லியனுார், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கனுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும், திருபுவனை மற்றும் மதகடிப்பட்டு பகுதியில் உள்ளதொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், வெளியூர் செல்ல பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்கள் மதகடிப்பட்டு ரவுண்டான அருகே தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், இந்த பஸ் நிறுத்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாததால், தற்போது மிகவும் சேதமடைந்து எந்நேரத்திலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் செடிகள் வளர்ந்துள்ளதால், விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன.எனவே, மதகடிப்பட்டு பகுதியில் சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X