இந்தியா

பாகூர் கூட்டுறவு நகரில் சுகாதார சீர்கேடு

Added : மார் 24, 2020
Share
Advertisement

பாகூர்: பாகூர் கூட்டுறவு நகரில், திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.பாகூர் கூட்டுறவு நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கூட்டுறவு வீடு கட்டும் சங்க அலுவலக கட்டடம் எதிரே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு, பின்னர், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. குப்பைகள் காற்றில், பறந்து வீதி முழுவதும் பரவி துர்நாற்றம் வீசியதால், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலமாக குப்பை தொட்டி வைக்கப்பட்டு அதன் மூலமாக குப்பைகள் சேகரிக்கப்பட்டது.குப்பை தொட்டி உடைந்து சேதமான நிலையில் மாயமானது. அதன்பின், மீண்டும் புதிதாக குப்பை தொட்டி வைக்காததால் திறந்த வெளியில் குப்பை கொட்டி சேகரிக்கப்பட்டு வருகிறது. திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளில், உணவு பொருளுடன் கிடக்கும் பிளாஸ்டி பைகளை, ஆடு, மாடுகள் தின்று விடுகின்றன. நாய்களும் அங்கு கிடக்கும் பொருட்களுக்காக சண்டையிட்டு கொள்கின்றன.இதனால், சாலை முழுவதும் குப்பை சிதறி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், அப்பகுதி மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பாகூர் கூட்வுறவு நகரில் குப்பை தொட்டியின் மூலமாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தினசரி உரிய முறையில் அப்புறப்படுத்திட, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X