சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் ரோட்டுக்கு வந்த ரோஜா பூ

Added : மார் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கொரோனாவால் ரோட்டுக்கு வந்த ரோஜா பூ

திண்டுக்கல்:கொரோனா எதிரொலியாக, ரோஜா விற்பனை பாதிக்கப்பட்டு பூக்கள் ரோட்டில் கொட்டப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, நத்தம், ஆத்துார், கொடைரோடு, ஏ.வெள்ளோடு பகுதிகளில் ரோஜா, மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, அரளிப் பூக்கள் சாகுபடியாகிறது. அவற்றை திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வெளியூர்களுக்கு பூக்களை அனுப்ப முடியவில்லை.கோயில்களிலும் பக்தர்களுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளதால் பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்ற ஒரு முழம் கதம்பம் ரூ.5க்கு விற்கிறது. ஒரு கிலோ மல்லிகை ரூ.100 முதல் ரூ.150க்கும், ரோஜா ரூ.20 முதல் ரூ.30க்கும் விற்கப்படுகிறது. பூ விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரோஜாப் பூக்கள் டன் கணக்கில் தேக்கமடைந்துள்ளன. அவற்றை ரோட்டில் கொட்டி காயவைத்து வாசனை திரவியம் தயாரிப்பு நிறுவனங்களிடம் விற்க திட்டமிட்டனர். ஆனால் ஊரடங்கு உத்தரவால் அதுவும் பாதிக்கப்படும் என கவலை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28-மார்-202018:25:48 IST Report Abuse
A.George Alphonse மனிதன் வயிறு கூழுக்கு அழுகும் போது ரோசாப்பு தேவையா?இறைவனையே அவரின் உறைவிடத்தில் மனிதர்கள் பூஜிக்க வழி இல்லை.பூக்களைஎன்னசெய்வது?
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
28-மார்-202006:20:36 IST Report Abuse
Nathan இந்த துலிப் சீசனில், ஹாலண்டில் பல மில்லியன் ரூபாய்களுக்கான விளைச்சல், மற்றும் ஜோடிக்கப் பட்டவை ஏலம் போகாமல் காட்டுக்கு கிடங்கில் கொட்டப் பட்டது பரிதாபம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X