இந்தியா

குடும்பத்திற்கு ரூ.5,000 நிவாரணம் இந்திய கம்யூ., கோரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி: அனைத்து ரேஷன்கார்டுகளுக்கு நிவாரணமாக ரூ.5,000 வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலர் சலீம் விடுத்துள்ள அறிக்கை:கொரோனா வைரஸ் காரணமாக புதுச்சேரியில் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மக்கள் பாதிக்காத வகையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.அங்கன்வாடி மையங்கள் மூலம் முககவசம், கைக்கழுவ தேவையான திரவம், சோப் போன்ற பொருட்களை அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வழங்கிட வேண்டும்.முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர்களுக்குமூன்று மாத பென்ஷனைமுன் கூட்டியே வழங்கிட வேண்டும். வியாபாரமின்றி பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர்கள் தொடர்ந்து தொழில் செய்திடவங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்றுள்ள கடன் தொகையில் மூன்று மாத தவணையை தள்ளுபடி செய்ய வேண்டும்.வீடற்ற மக்கள் பயன் பெற்றிடும் வகையில் அரசு அவர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். வேலையற்ற நிலையில் மக்கள் மாதந்தோறும் செலவிடும் மின் கட்டணம், வீட்டு வரி, ஜி.எஸ்.டி.,வரிகளை மூன்று மாதம் தள்ளுபடி செய்திட வேண்டும்.கேரளா, ஆந்திர மாநில அரசுகள் அறிவித்துள்ளதை போன்று புதுச்சேரி மாநில அரசும் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் நிவாரணமாக ரூ.5,000 வழங்கிட வேண்டும்.இதேகருத்தை காரைக்கால் மாவட்டஇந்திய கம்யூ., செயலர் மதியழகன் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X